Production: K Muralidharan, Lakshmi Movie Makers
Cast: Anjali, Jayam Ravi, Kumki Ashwin , Prabhu, Rekha, Soori, Trisha
Direction: Suraj
Screenplay: Suraj
Story: Suraj
Music: SS Thaman .rating 2-5/5.உலகநாயகன் கமலஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்த படம் சகலகலாவல்லவன். அதே பெயருடன் இப்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் சகலகலாவல்லவன், ஜெயம் ரவி (சக்தி) மற்றும் ‘சின்னப்புத்தி’ சின்னச்சாமி (சூரி) இருவரும் தென்காசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பகையில் இருக்கும் உறவினர்கள். சின்னச்சாமியின் முறைப்பெண் செல்வியைக் (அஞ்சலி) கண்டவுடன் காதலில் விழும் ஜெயம்ரவி ,அதற்காக சூரி குடும்பத்துடன் நட்பாகிறான். பதிலுக்கு சென்னையிலிருந்து வரும் சக்தியின் அத்தை மகள் திவ்யாவை (திரிஷா) மணக்க விரும்புகிறான் (சூரி)சின்னச்சாமி. ஆனால் திவ்யாவுக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது.ஆனால்,கடைசி நிமிடத்தில் அந்தத் திருமணம் நின்றுவிட, தந்தை (பிரபு) சொல் தட்டாத சக்தி பிரபுவின் கட்டளைப்படி (திரிஷா) திவ்யாவை மணக்கிறான். ஆனால் இருவருக்கும் திருமண வாழ்க்கை ஒத்துப் போகாததால் சக்தியிடம் ஒரே மாதத்தில் விவாகரத்துக் கேட்கிறார்., ஆனால்,தன் ஊருக்கு வந்து தனது பெற்றோருடன் ஒரு மாதம் வாழ ஒப்புக்கொண்டால் விவாகரத்துக்கு சம்மதம் தருவதாகக் கூறுகிறான் சக்தி.. இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் திவ்யா சென்னையை விட்டு கிராமத்திற்கு செல்கிறாள்.முடிவில் அங்கு என்ன நடக்கிறது!சக்தி-திவ்யா ஜோடி பிரிந்ததா, சேர்ந்து வாழ்ந்ததா என்பதே மீதிக் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை கொடிகட்டி பறப்பதால் படம்முழுவதும் நகைசுவைக்கு பஞ்சமே இல்லை. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் டுபாக்கூர் அரசியல்வாதியான சூரி மற்றும் அவரது உதவியாளர்களின். நகைச்சுவை அஞ்சலியின் கவர்ச்சி ஆகியவற்றோடு படத்தின் முதல் பாதி நகர்கிறது. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான நகைச்சுவை, நடனம், சண்டை, உணர்ச்சிகர நடிப்புஅனைத்தையும் ஜெயம் ரவி சிறப்பாகவே செய்துள்ளார்.அஞ்சலி மற்றும் திரிஷா இருவருக்கும் சமமான பாத்திரங்கள், அஞ்சலி கவர்ச்சியாக வந்தாலும் அவரின் பெருத்த உடம்பு அதை ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.குட்டி நமீதாவாக படம் முழுவதும் உலா வருகிறார் அஞ்சலி! திரிஷா முகத்தில் முதிர்ச்சி தெரிய தெரிகிறது.படம் முழவதும் ரசிகர்களை சிரிக்க வைத்து விடுவதில் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளதால் லாஜிக்கே கேள்விக்குறியாகி விடுகிறது. பிரபு வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் வளம் வரும் நல்ல ஊர்த் தலைவர் நாட்டாமையை நினைவு படுத்துகிறார். சூரி வரும் பல காட்சிகள் எரிச்சல்.என்றாலும், ஊரில் அலப்பறை செய்து அனைவரிடமும் பல்பு வாங்கி தன் உதவியாளர்களாலேயே கிண்டலடிக்கப்படும் சின்னச்சாமியாக ரசிக்கலாம். சில காட்சிகளே வந்து செல்லும் நடிகர் விவேக் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்புகிறார். இரட்டை அர்த்த வசனங்களை எல்லை மீறாமல் பேசி,ரசிகர்களிடம் கை தட்டல் பெறுகிறார். . காமெடி போலீசாக மொட்டை ராஜேந்திரன் பிரமாத படுத்திவிடுகிறார்.ஒட்டு மீசையை கழற்றி வைத்து விட்டு அவர் குற்றவாளிகளை உதைக்கும் காட்சிகளில் ரசிகர்களின் கைதட்டல் திரையரங்கில் அதிர்கிறது. .தமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.. பின்னணி இசையும் சொல்லும் படியாக அமையவில்லை என்பதே உண்மை! ஒளிப்பதிவு (யு.கே.செந்தில்குமார்), நிறைவு! படத்தொகுப்பு (ஆர்.கே.செல்வா) ஆகிய தொழில்நுட்ப சமாச்சாரங்களும் அப்படியே.மொத்தத்தில் எதையும் பெரிதாக நினைக்காமல் சிரித்து விட்டு வரலாம்!
மதிப்பெண்- 2.5/5