பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’..
நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.. இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குனர் நிகில் வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
முகவரி, பெயர் என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு. அமையா தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்து பார்க்கும் விதமாக படம் துவங்குகிறது.
“தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப்பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும். அழகான லொக்கேஷன்களும் பழங்குடியினரின் கலாச்சராம் எல்லாமுமாக சேர்ந்து இந்த ‘அமையா ’ மிகப்பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும்” என்கிறார் இயக்குனர் நிகில் வி.கமல்.