ஆளாளுக்கு நீட்டும் மைக்குகளில் “அடடே,அபாரம்!” “சமூகபுரட்சி” “வெள்ளி விழா படம்ங்க”இப்படி எவ்வளவோ அள்ளிவிடுவார்கள் படம் பார்த்து விட்டு வெளியில் வரும் திரை உலக பிரபலங்கள்.!
அதெல்லாம் உண்மையா?
‘கலப்படமில்லாத பொய்ங்க ‘என்கிறார் புரட்சித் தமிழன் சத்யராஜ்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவரவிருக்கிற படம் ‘கனா’. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,இளவரசு கவுரவ வேடத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ,தர்ஷன், இன்னும் பலர் நடித்து வெளிவரப்போகிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அந்த பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டினார்.
“எத்தனையோ ‘பிரிவியூ தியேட்டர் வாசல்களில் நின்னு சொன்ன பொய்களுக்கு கணக்கே இல்லிங்க”என்றார்.
“கதாநாயகன்களுக்கு கட்அவுட் வைத்து பாலாபிசேகம் பண்ணுவார்கள்.அந்த கட் அவுட்களுக்கு பின்னால் முட்டுக் கொடுத்து தாங்கி நிற்கும் மூங்கில்கள் தெரிவதில்லை.அதைப்போல திரை மறைவு கலைஞர்களான ஒலி சேர்ப்பார்களை நாம் கண்டு கொள்வதில்லை.
சமூக சிந்தனை உள்ள டைரக்டர்கள் ஜெயிக்கிற போது சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படும் “என்றார் சத்யராஜ்.