மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதிய கட்சியை நடிகர் கார்த்திக்தொடங்கினார்.
நெல்லையில், புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய பின்பு கார்த்திக் கூறியதாவது, ‘தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய நாடாளும் கட்சியைத் தொடங்கினேன். பின்னர், அதை கலைத்துவிட்டு நாடாளும் மக்கள் கட்சியை உருவாக்கினேன். ஆனால், கட்சி நிர்வாகிகள் முறையாக செயல்படாததால் அக்கட்சியையும் கலைத்துவிட்டு, இப்போது மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன்.
கட்சியின் கொள்கை குறித்து ஒன்றரை மாதத்தில் அம்பாசமுத்திரத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தலில் தேசப்பற்று மிகுந்த இளைஞர்களைப் போட்டியிடச் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.
மனித உரிமை காக்கும் கட்சியின் கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் முத்துராமலிங்க தேவர் படமும் பொறிக்கப்பட்டுள்ளது.












