இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முன்னணி தலைவி சோனியா காந்தி திறந்து வைத்தார்.
காங்.தலைவர் ராகுல் காந்தி,ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,கேரளா முதல்வர் பினராயி ,பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி பாஜக நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
“திமுக-காங்.கட்சிகளுடன் கூட்டணி இல்லை “
என்பதாக அறிவித்திருந்த கமல்ஹாசன் கலந்து கொள்வாரா,என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் திரை உலகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி , கவிப்பேரரசு வைமுத்து,நாசர்,பிரபு,வடிவேலு ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். காங்கி.லிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய ஜி.கே.வாசனும் கலந்து கண்டார்.
“இந்த விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை?”
“கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்காக இன்று அங்கு செல்கிறேன்.அதனால் கலந்து கொள்ளவில்லை.வேறு எந்த காரணமும் இல்லை.கலைஞர் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது.அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் “இல்லை என்பதாக சொன்னார்.