ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் கோழைக்கும் குச்சியைத் தூக்கி நாலு இழுப்பு இழுக்கத் தோணும்.எதிர்வினை எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆட்சியும் இல்லை அதிகாரமும் இல்லை.படையும் இல்லை இப்படி எதுவுமே இல்லாமல் பிரசார சாதனம் மட்டுமே கையில் உள்ள நிலையில் இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் அரசை எதிர்க்கிறார் என்றால் எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவரால் ஆளும்கட்சிகளின் அராஜகத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. சரி அரசியல் கட்சி தொடங்கவிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினி வழியாக தைரியமாக அரசியல் கருத்துகளை சொல்லலாம் இன்னொரு சர்காராக புயலாக ரஜினி படத்தை கொடுக்கலாம் என நினைத்திருப்பாரோ என்னவோ..
ஆனால் அரசியல் வேணாம் என்று சூப்பர் ஸ்டார் சொன்னதின் பேரில் அரசியலை அந்த படத்தில் சொல்லவில்லை என்பதாக சொல்லி இருக்கிறார்.முருகதாஸ்.! ரஜினியின் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருக்கும் என்கிறார்கள். ஆனால் துப்பாக்கி 2 கண்டிப்பாக வரும் என்பதை சொல்லியிருக்கிறார்.அதில் தளபதி விஜய் இருப்பாரா?
அதில் அரசியல் இருக்குமா முருகதாஸ்?