“அந்த ஸ்டார் இந்த ஸ்டார் இவங்கல்லாம் ஆடியோவை வெளியிட்டு அதகளம் பண்றபோது நாங்க மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? “என்று சூர்யாவின் ரசிகர்கள் தாரை,தப்பட்டை,மேள தாளம் இவைகளுடன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
விட்டால் போராட்டம் நடத்தினாலும் ஆச்சரிப்பட வேண்டாம். அந்தளவுக்கு வெறியுடன் இருக்கிறார்கள்.
பார்த்தார் பிரபு, இனியும் அமைதி காப்பது நல்லதல்ல என்று ஒரு பதிவை வெளியிட்டு விட்டார்.
“என்ஜிகே பாட்டெல்லாம் ரெடி! இரண்டு லெஜண்ட்களான செல்வராகவன்,யுவன்சங்கர் ராஜா ஆகியோருடன் பணியாற்றிய பெருமை எங்களுக்கு. இனிமையான பாடல்கள்
.எப்ப வெளியிடுவீங்க என்று மட்டும் கேட்டுடாதிங்க. ஆனால் விரைவில் வந்துவிடும்”என்று சொல்லி அமைதிப்படுத்தி இருக்கிறார்