இப்பவே ‘டாக்’ வேற மாதிரி இருக்கு.. ‘பேட்ட’படத்த விட ‘தல ‘ அஜித் படம்தான் கமர்ஷியலா தூக்கலா இருக்குன்னு ‘இண்டஸ்ட்ரியில் பேச்சு. இப்படிப்பட்ட நிலையில் பேட்ட படம் இந்து-முஸ்லிம் ஆணவக்கொலையை பற்றிய படம்னு கொளுத்திப் போடுறாங்க. படம் வருவதற்கு முன்னாடியே சொந்தக்கதைன்னு சிலர் உரிமை கொண்டாடுவாங்க.இப்ப இந்த மாதிரியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க..என்ன பண்றது? ஏஆர் முருகதாஸ் கதை இன்னும் முடிவு பண்ணலேன்னு ஒரு நியூஸ் அடிபடுது. அதுக்குள்ளே அந்த படத்துக்கு நாற்காலின்னு ஒரு டைட்டிலை போட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டாச்சு. சி.எம்.நாற்காலியைப் தலைவர் பிடிக்கப்போறார்.அதுக்கு அடையாளம்தான் இந்த படம்னு ஒரு பப்ளிசிட்டி.