பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை
‘ எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி .எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன்.மாரி நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை .அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் .
மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும்.இளையராஜா இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார்.அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.யுவனுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன்.அவர் 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம்.சாய் பல்லவி , மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி .”என பேசினார்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசியவை: வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கேப் விட்டு தனுஷ் அவர்களுடன் இணைத்துள்ளேன்.மிகவும் சந்தோசமாக இருக்கிறது என பேசினார்.