இன்றைய திரை உலக அதிரடி செய்தி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கைது என்பதுதான்!
நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த டி.சிவா, சுரேஷ் காமாட்சி,எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் சங்கத்துக்கு வந்து ஆர்பாட்டம் செய்து விட்டு பூட்டு போட்டு விட்டு போய் விட்டார்கள். (அது சட்டப்படி சரிதானா இல்லையா என்பது வேறு விஷயம்.) இன்று காலை அலுவலகம் வந்த சங்கத்தலைவர் விஷால் பூட்டை உடைக்க முயற்சித்த போது அங்கு காவலுக்கு இருந்த போலீசார் தடுத்திருக்கிறார்கள்.
இதனால் விஷாலுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்தது,
“நாளைக்கு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அது தொடர்பான வேலைகளைப் பார்க்கவேண்டும்” என்று வாதிட்ட விஷாலை கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.
எல்லாம் மேலிடத்தின் ஆணை!