விஜய் ரசிகர்கள் பேராவலை பூர்த்தி செய்யும் வகையில், புலி படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது, இப்பாடல்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.இதில் ’மனிதா மனிதா’ என்ற பாடல் மிகவும் புரட்சிகரமாக வும் ,எழுச்சியை தூண்டும் விதமாகவும் உள்ளது. இது உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்பாடலில் ஈழத்தமிழர்களை பெருமை படுத்தும்விதமாக சில வரிகள் இடம்பெற்றுள்ளது.“பட்டாம் பூச்சிகளாக பறந்து திரிந்தோம்… ஒன்றாக வளர்ந்தோம்… வஞ்சகர் சூழ்ச்சியால் நம் வாழ்கை தேய்ந்தது பின்னாளில்… உடையட்டும் உடையட்டும் விலங்குகள் உடையட்டும்…முடிவெடு தமிழினமே…திசை எட்டும் தெறிக்கட்டும்..புறப்படு புலியினமே” என்று இப்பாடலில் வரிகள் அமைந்துள்ளது. இப்பாடல் உலகத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.