நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.தமிழ்த்திரைப்படத்தயாரிப்பளர்கள் சங்கத்தலைவர் விஷாலுக்கு எதிராகசுமார் 150 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளனர். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு என சரமாரியாக குற்றசாட்டுகளை கூறியதுடன் ,விசாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில்மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைமையில் விஷால் எதிர் தரப்பு தயாரிப்பாளர்கள் , முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் மீது முதல்வரிடம் புகார் அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் இன்று இரவு சீல் வைத்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சக்கட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.