ஒத்த சிந்தனையுள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மைய இயக்கத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.
தமிழ்த் திரை உலகின் இரு மாபெரும் நடிகர்களான கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
கமல் ஆரம்பித்து விட்டார். ரஜினி தொடக்க வேலைகளில் இருக்கிறார். ரஜினி தொலைக்காட்சி தொடங்கப்போவதாகவும் அதற்கு பாண்டே தலைமைப் பொறுப்பு ஏற்கப்போவதாகவும் செய்திகள் வந்துள்ளன.இதன் பின்னணியில் பிஜேபி இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவ சோதனைக்காக குடும்பத்துடன் அமெரிக்க சென்றிருக்கிறார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் .கஜா புயல் பகுதிகளுக்கு ரஜினி செல்லாததன் காரணமே உடல்நிலைதான்.நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.இதை கருத்தில் கொண்டுதான் அமேரிக்கா சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
ரஜினி அங்கு சென்றுள்ள நிலையில் இங்கு கமல் தனது தேர்தல் பிரவேச அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இவர் பிஜேபி யை கடுமையாக எதிர்ப்பவர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலை இவரது மக்கள் நீதி மையம் எதிர்கொள்கிறது.. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்கிறது ர். வருகிற தேர்தலில் ரஜினியை முன்னிறுத்தி போட்டியிட பிஜேபி நினைத்திருந்தால்கமலும் ரஜினியும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்படும்.