காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சுன்னா,மயிலுக்கு தன் குஞ்சு எப்படி இருக்கும்? பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர் விஜய்மில்டனை கேளுங்கள் சொல்வார்.!
ஷாருக்கான் பாலிவுட்டின் பாதுஷா. பாட்ஷாகான் என்பார்கள். அவர் இந்தியில் ஜீரோ என்கிற படம் தயாரித்து வெளியிட்டார்.உலக நாயகன் கமல்ஹாசனைப் போல இவருக்கு குள்ள அப்பு வேடம். கமல் தயாரித்து வெளியிட்டிருந்த அபூர்வசகோதரர்கள் இந்தியும் பேசியது. வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் அந்த படத்துக்கு அங்கு நல்ல வரவேற்பு. ஆனால் ஷாருக்கானின் ஜீரோவுக்கு வரவேற்பு இல்லை. விமர்சன ரீதியாக ஆதரவும் இல்லை.
ஜீரோ படம் பார்த்த விஜய் மில்டன் தனது பதிவில் “நம்ம கமல் சார் எவ்வளவு பெரிய ஹீரோ என்று காட்டுவதற்கு வந்திருக்கு ஜீரோ ” என்பதாக அந்த பதிவில் கூறி இருக்கிறார்.