தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற
திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ்
திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கம உருவாகியுள்ளது.
இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் அபிராமி இராமநாதன் தலைமை
தாங்கினார், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்
கே. பி அன்பழகன், தமிழக செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோர் குத்துவிளக்கேற்றி
சங்கத்தை துவக்கி வைத்தனர்.
சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும்
, சங்க பொதுச் செயலாளராக R .பன்னீர் செல்வமும்
பொருளாளராக D.C. இளங்கோவனும் மற்றும் பல
நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன்
பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில்
ஆணை வழங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர்
எடப்பாடிகே. பழனிசாமி தலைமையிலான நல்லரசுக்கு சங்கத்தின்
சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது, மேலும் நிலுவையில் உள்ள மற்ற
கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு
வேண்டுகோள் விடுக்கப்பட்டது, விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்