பாயும் புலி பட விழாவில் விஷால் பேசும்போது, ‘‘என் தாயை நேசிப்பது போன்று சினிமாவை நேசிப்பவன் நான். அதனால் தான் சினிமாவுக்கு ஒரு பாதிப்பு என்றால் எனக்கு கோபம் வருகிறது. அது சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுகிறேன். இதை நான் பப்ளிசிட்டிக்காக, அரசியலுக்கு வருவதற்காக செய்வதாக சொல்கிறார்கள்! ஆனால் நிச்சயமாக எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது. சினிமாவும், சமூகமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என் மனதுக்கு பட்டதை செய்கிறேன், சொல்கிறேன். இந்த தருணத்தில் எல்லோருக்கும், அதிலும் குறிப்பாக என் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எல்லோரும் அப்துல் கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்றும் விதமாக செயல்படுங்கள்! இந்த மேடையில் இரண்டு மாணவிகளுக்கு படிக்க பண உதவி செய்ததை போன்று இனி வரும் காலங்களில், அதாவது என் உயிர் இருக்கும் வரை என்னால் முடிந்த வகையில் கல்விக்காக உதவி செய்ய இருக்கிறேன்’’ என்றார்.