போலீஸ் யூனிபார்ம் போட்டாலே விறைப்பு வந்திரும்னு சொல்வாங்க. அது விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன் படத்தில வந்தது.பட்டையை கிளப்பினார். இந்த படத்தில் அதுக்கு நேர்மாறு .குற்றவாளிகளை பிடிக்கவே நடுக்கம் .காமடி படமாச்சே.ஆனால் ஆப் பாயிலை முழுசா முழுங்குறதுக்கு முன்னாடி எவனாவது தட்டி விட்டுட்டான்னு வெச்சுக்குங்க.அவனை பின்னி நரம்ப எடுத்துடுவார் , அவருக்கு சக்தி ஆப் பாயில்.!
அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு டபிள் மீனிங் டயலாக்சை நம்பாம சீன்களை நம்பியது நாம்ப செய்த புண்ணியம்.
என்கவுண்டரில் போட்டுத்தள்ளனும்னு போலீஸ் தேடுகிற முரட்டுக் கொலைகாரன் சாய்குமார் .இவருக்கு ஏழரை அந்த ஆப் பாயிலில் வந்து உட்கார்ந்து விட்டது.தெரியாமல் தட்டி விட போலீஸ்காரர் விஷ்ணு விஷால் அவரை அடித்துப் புரட்டி லாக் அப்பில் கொண்டுபோய் அடைத்து விடுகிறார் .அவர்தான் தேடப்படுகிற குற்றவாளி என்பது தெரியாமலேயே!
யோகிபாபு அண்ட் கோ வந்து அவரை மீட்டுச்செல்கிறது.லாக்கப்பை விட்டு வெளியே வரும்போது “உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” என்று சாய்குமார் செய்கிற சபதம்தான் படத்தின் பிற்பாதியின் ஜீவன். செம ஜாலியாக கடக்கிறது.சிங்கமுத்து என்ட்ரி கொடுத்ததுமே தனி களை வந்து விடுகிறது.இவரும் யோகிபாபுவும்தான் ஏரியாவையே கலக்குகிறார்கள்.
விஷ்ணு விஷால் -ரெஜினா இருவரும் நாயகன் நாயகி வட்டத்திற்குள்ஆபாச அசைவுகள் இல்லாமல் ஆடிப்பாடியது சந்தோசம்.
ஓவியா ஆர்மிக்காரர்கள் சண்டைக்கு வந்து விடக்கூடாது அவருக்கு குட்டி வேடம்.குத்தாட்டத்தையும் ஒரு தினுசாக போட்டிருக்கிறார்.
சாய்குமாரிடம் இருந்து தப்புவதற்காக விஷ்ணு விஷால் போடுகிற மாறுவேடங்கள் சில ரசனை.சில சோதனை. குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக கழிசடை காமடிகளை தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
படம் பார்த்தமா பாப்கார்னை ருசித்தமா என்கிற திருப்தி!