ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று அவரது வாழ்க்கையை ஆளுக்காள் கூறு போடத் தொடங்கி விட்டார்கள்.
தற்போது ‘வெப்’சீரியலாகவும் வரப்போகிறது. அதில் ரம்யா கிருஷ்ணன்தான் ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம்.ஜி.ஆராக இந்தர்ஜித் என்பவரும் சோபன்பாபுவாக வம்சி கிருஷ்ணனும் நடிக்கும் இந்த சீரியலை இயக்கி வருகிறவர் கவுதம் வாசுதேவ மேனன்.
படமாக்கப்போவதாக சொன்ன பாரதிராஜா,ஏஎல் விஜய் இருவரும் அறிவிப்புடன் நின்று விட்டார்கள்.ஒரே கதையை எத்தனை பேர்தான் எடுக்க முடியும்? வம்பு வழக்குதான் வரும் என்கிற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.