முடியப்போகும் இந்த ஆண்டில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டவர்களில் முதல் இரண்டு இடங்களில் பிரதமர் மோடி, காங்.கட்சித்தலைவர் ராகுல் காந்தி. இவர்கள் எக்கச்சக்கமான ட்விட் பதிவுகளை போட்டிருந்தார்கள்.ஆனால் மூன்றே மூன்று டிவிட்களை மட்டும் பதிவு செய்து டாப் டென் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் தளபதி விஜய். வேறு எந்த தமிழ் நடிகர்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.கெத்துதான்!