டயானா மரியம் குரியன் என்பதுதான் நயன்தாராவின் சொந்தப்பெயர். மலையாளி. இந்த ஆண்டு கிறிஸ்துமசை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுகிறார்.
பிரபுதேவாவை காதலித்தபோது கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காக ஆரிய சமாஜம் வழியாக இந்து மதத்துக்கு மாறிவிட்டார் என்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அது அவ்வளவு சாத்தியமில்லை. வீட்டாரும் ஒத்துக் கொள்ளவில்லை. பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடையே ஆழமான காதல் இருந்தது.
அந்த காதல் முறிந்த பின்னர்தான் விக்னேஷ் சிவனுடன் புதிய காதல் முகிழ்த்தது.
தற்போது இருவரும் ஒரே பிளாட்டில்தான் இருக்கிறார்கள்.இந்த வருட கிறிஸ்துமஸ் காதலருடன்.
அடுத்த வருட கிறிஸ்துமஸ் கணவருடன் இருக்க வாழ்த்துவோம்.