என்னதான் செய்வார் அந்த மனிதர். நிதி நெருக்கடி எப்படியெல்லாமோ சிக்க வைக்கிறது .செக்கில் போட்டு ஆட்டுகிறார்கள். இதோ அறிமுக நடிகர் ஷாமின் குற்றப்பத்திரிக்கை
“ஷாம் என்கிற என் பெயரை மாற்றி மைத்ரேயா என்று புதிய பெயரை சூட்டி, ஹீரோவாக என்னை வைத்து இயக்குனர் மிஷ்கின் இயக்குவதாக பத்திரிகையாளர்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்து எங்களிடம் முன்பணமாக மிகப்பெரிய தொகையை பெற்றார்.
ஆனால், இப்போது என்னை ஹீரோவாக நடிக்க வைக்க எங்களுக்கு கூறிய கதையை இயக்குனர் மிஷ்கின், ‘சைக்கோ’ என்ற பெயரில் தற்போது வேறொரு ஹீரோவை வைத்து தயாரித்து வருகிறார்.
இப்படத்தை எங்கள் அனுமதியின்றி மாற்றி வேறு ஹீரோவை வைத்து தயாரித்து வருவதை அறிந்தோம். தற்போது தயாரிப்பில் அந்த படம் இருப்பதால், இந்த கதையை படமாக்குவதற்கு உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறோம்.”என அறிக்கை விட்டிருக்கிறார்.