தல ரசிகர்களுக்கு இரட்டைப் பொங்கல். தணிக்கைக்குழுவினரே குடும்பத்தோடு படத்தை பாருங்கப்பா என்று ஸ்வீட் வழங்கி இருக்கிறது. யூ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இனி ரசிகர்கள்தான் தயாரிப்பாளருக்கு கற்கண்டு பொங்கல் கொடுக்க வேண்டும்.அது இயக்குநர் சிவா கையில்தான் இருக்கிறது
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு மகிழ்ச்சி.விட்டால் திருப்பதிக்கே போய் எழுமலையானுக்கு இன்விடேஷன் வைத்து கூப்பிட்டுவிடுவார் போல.! அறிக்கை விட்டு நெகிழ்ந்து இருக்கிறார்.
“எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் “விஸ்வாசம்” படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.
|