பரட்டைத் தலையும் ,தடித்த உதடுகளும் ,டைமிங் சென்சும் யோகிபாபுவை உச்சத்துக்கு கொண்டு போய் இருக்கிறது. ஹீரோவா நடிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கல்லாவை ரொப்பி வருகிறார்.
மூணு படங்களில் அவர்தான் நாயகன்.கூர்க்கா,ஜோம்பி,தர்மபிரபு ஆகிய படங்களில் அண்ணாத்தே ஆட்ட நாயகன். தர்மபிரபுவுக்கு அவர்தான் வசனம் எழுதுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.இந்த படத்தில் எமனாக நடிக்கிறார்.
இவரது கைத்தடி சித்ரகுப்தனாக திலக் மற்று வத்திக்குச்சி திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள். சிரிக்கவைக்கும் யோகிபாபுவினால் வசனம் எழுத முடியுமா என்பதை இனிதான் பார்க்கவேண்டும்.
பொதுவாக காமடி நடிகர்கள் அவர்களுக்கென ஒரு கோஷ்டியை வைத்திருப்பார்கள். அவர்கள்தான் காமடி காட்சிகளை திரட்டிக்கொண்டு வருவார்கள்.
இவருக்கென அமைந்திருக்கும் கோஷ்டி எப்படியோ!