அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.சிலர் நோகடித்திருந்தாலும் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவருண்டு ,அவரது வேலையுண்டு என வாழ்ந்து வருகிறவர்.
அவரது தயாரிப்பான கனா மிரட்டலான படங்களுக்கும் மத்தியில் நின்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு புத்தாண்டு ஒரு கை அளவுக்கு படங்களை கொடுத்திருக்கிறது.
ரவிகுமார், எம்.ராஜேஷ்,மித்திரன்,விக்னேஷ் சிவன்,ஆகியோரின் படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கம் படத்திலும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படம் லைகா, அல்லது சொந்த தயாரிப்பாக இருக்கலாம்.2 0 1 9 -ம் ஆண்டில் ஐந்து படங்கள் கை வசம் இருக்கிறது.