சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு பெயர் வைப்பதென்றாலே எண் கணிதம் ஜோதிடம் எல்லாமே பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் வித்தியாசமானவர். ‘ன் ‘என முடிகிற வகையில் தலைப்புகளை வைத்து விடுவார்.
தற்போது லைகா வின் தயாரிப்பில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் .
பிரதமருக்கு மெய்க்காப்பாளராக சூர்யா நடித்துள்ள அந்த படத்துக்கு மூன்று தலைப்புகளை தேர்வு செய்திருக்கிறார்.அதில் ஒன்றை ரசிகர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒன்று இலக்கியத் தரமானது.
மீட்பான்,
காப்பான்,
உயிர் கா,
என்கிற தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
“ஒருகால் முருகா,பரமா,குமரா,உயிர் கா எனவோதருள் தாராய்”என்பதில் உயிர் கா என்பது வினைச்சொல்.காக்க,காத்து என பொருள் கொள்ளவேண்டும்.
இந்த படத்தில் மோகன்லால்,ஆர்யா,சாயிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரசிகர்கள் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்களோ!