அரசமரத்தைப் பிடித்த சனியன் அங்கிருந்த பிள்ளையாரையும் சேர்த்து பிடித்த கதையாகிப் போச்சு ! எல்லாம் ‘சைக்கோ’மேட்டர்தான்.
“உன்னை ஹீரோவாக்குகிறேன்,நீதான் சைக்கோ படத்துக்கு மெயின்” என்பதாக சொல்லி மைத்ரேயன் என்கிற புதுமுகத்திடம் இயக்குநர் மிஷ்கின் சில கோடிகளை அட்வான்சாக வாங்கி இருக்கிறார்.
ஆனால் அதே சைக்கோ கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து 6 0 சதவீத வேலையை முடித்து விட்டார், இந்த கதையில் அதிதி ராவ்,நித்யா மேனன்,இயக்குநர் ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு. இசை இளையராஜா
“படமும் எடுக்கல, வாங்கின அட்வான்சையாவது திருப்பிக் கொடு” என்று மைத்ரேயன் கேட்டதற்கு நோ ரெஸ்பான்ஸ்.
நேராக சென்னை உயர்நீதி மன்றம் போய்விட்டார் மைத்ரேயன். சைக்கோ படத்தை எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் தடைபோட்டுவிட்டது. உதயநிதியும் இளையராஜாவும் என செய்ய முடியும்.?
சாய்ச்சுப்பிட்டாரய்யா மைத்ரேயன்!
இப்ப புரியுதா முதல் வரிசையில் சொல்லி இருப்பது!