நடிகர் சீனுமோகன் வயது61.கிரேஸி மோகன் நடகக்குழுவில் சுமார் 3,000க்கும் மேற்பட்டமேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்த சீனுமோகன் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கிரேஸி மோகன் நாடக குழுவில் இணைந்தார்.1980 களில் வருசம்16.,அஞ்சலி, தளபதி, தலைவாசல், விசில்,இறைவி,ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில்இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிசிச்சை பலனின்றி அவர்து உயிர் பிரிந்தது. சீனுமோகன் சுமார் 3000த்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கிரேஸி மோகனின் நாடகக்குழுவில் 1979ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் நடித்த நாடகங்களில் பிரபலமான நாடகங்களில்,மர்மதேசம் ரகசியம்,மாது பிளஸ்’ டு’,மதில் மேல் மாது,மேரேஜ் மேட் இன் சலூன்,ரிட்டர்ன் ஆப் கிரேசி தீவ்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கது.