என்ன இருந்தாலும் நம்ம வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவின் நுண்ணிய சிறுமூளை இருக்கே அதுக்கு தங்கப்பதக்கம் சூட்டி தாலாட்டுப்பாடனும் சாமி.!
நூறு அடி நீல வலையை வீசி ஒரு அயிரை மீனை பிடிக்கிறதுன்னா சும்மாவா?
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 2 0 0 7 –8 ம் வருஷத்துக்கு வருமானவரி கட்டலயாம்.அடடா பெத்த அமவுண்டா இருக்கும்னு நினைக்கிறீங்கள்ல. இருக்காதா பின்னே !
விளம்பர படம்,பிரான்ட் அம்பாசடர் ஆகியவகைகளில் வந்த பணம் ஆச்சே…பையைத் தடவினாலே பல கோடி மாட்டணுமே. 1 8.பாயின்ட் 5 லட்சம் மாட்டியிருக்கு,!
இத்தனை வருஷமா என் கட்டலேன்னு கேட்டாங்களோ என்னவோ தெரியல. நேத்து பெரிய கோணிப்பையை எடுத்து ஆளை லபக்கி வட்டி அபராதமுடன் 7 3 .5 லட்சம் கட்டுன்னு சொல்லி இரண்டு பாங்க் அக்கவுன்ட்ஸ்களை முடக்கி வச்சிட்டாங்க,சாதனைதாங்க.மல்லையாவே பாராட்டுவார்.