மீடியாக்களுக்கு காதல் தீனி போட்டுக் கொண்டிருந்தவர்கள் விஷாலும் வரலட்சுமியும்.!
அவர்களும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகப் போய் வந்தார்கள். ஊடகத்தினரின் கேள்விகளுக்கு விஷால் கூறிய பதில்கள் எல்லாம் பத்திரிகையாளர்களின் பசிக்கு இனிப்பாகவே இருந்தது.
“நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தனது கல்யாணம் நடக்கும்” என்பதாக அவ்வப்போது அல்வா கொடுக்கவும் தவற வில்லை. தனது கல்யாணம் காதல் கல்யாணமாகவே இருக்கும் என அவர் அவிழ்த்து விட்டதை செய்திகளாகவும் வெளியிட்டன.
இந்த நிலையில்தான் இருவரும் பிரிந்து விட்டதாகவும் சொன்னார்கள். வரலட்சுமியும் உறுதி செய்தார்.
ஆனால் வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும் அதற்கு விஷாலின் சம்மதம் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எது உண்மை என்பது கல்யாண செய்தி அதிகாரப்பூர்வமாக வந்தால்தான் தெரியும்.!பல்டி நிக்ற பல்தே!