ராகவாலாரன்ஸ்,இயக்கி நடிக்கும் “ மொட்டசிவா கெட்ட சிவா “ மற்றும் “ நாகா “ இந்த இரண்டு படங்களின் அறிமுக விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில், இயக்குனர் ஆர்.பார்த்திபன், பன்னீர்செல்வம், எடிட்டர் மோகன், சுப்பையா,சாய்ரமணி, ஜித்தன் ரமேஷ், வேல்ராஜ், ராதா கிருஷ்ணன், சிவஸ்ரீ சிவா,கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ராம் வாசு, வெங்கட்,ஜேம்ஸ், அசோக் சாம்ராஜ், எல்.சுரேஷ், ஜி.சிவா, சித்ராலட்சுமணன்,ஜி.தியாகராஜன், மனோபாலா, எஸ்.தாணு , ஜே.எஸ்.கே.,பி.எல்.தேனப்பன், பாரிவேந்தர், எஸ்.மதன், சுசீந்திரன், தனஞ்செயன்ஆகியோர் கலந்துகொண்டனர்./இப்படங்களின் அறிமுக விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. பசுமை திட்டம் 1 கோடி நிதியுதவி விழாவில் நடிகர் ராகவா லாரன்சுக்கு, சம்பள முன் பணமாக வேந்தர் மூவிஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் மதன் ரூ.1 கோடியை கொடுத்தார். அந்த தொகையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை’ திட்டத்துக்கு வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார். கல்வி மற்றும் பசுமை திட்டம் இதுகுறித்து பேசிய லாரன்ஸ் 100 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களின் கல்வி செலவிற்காக இந்த தொகையினை செலவு செய்வது மற்றும் மரங்கள் நடுவதின் மூலம் இந்த மாநிலத்தை பசுமை மாநிலமாக மாற்றுவது இந்த 2 திட்டங்கள் தற்போது எனது மனதில் இருக்கின்றன. கலாமின் காலச் சுவடுகள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எனது அம்மாவிடம் கேட்டபோது நாம் முன்பே நினைத்தது போல இந்தத் திட்டத்திற்கு கலாமின் பெயரையே சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறையன்பு ஐஏஎஸ் எனவே எனது அம்மாவின் விருப்பபடி இந்தத் திட்டத்திற்கு “கலாமின் காலச் சுவடிகள்” என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை முன்னால் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்கள் பார்த்து கொள்வார்கள், அவருக்கு உதவியாக சில சமூக நல ஆர்வலர்களும் உடன் இருப்பார்கள். 1 கோடி ரூபாயா? “முதன்முதலில் நான் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறும்போது எனது மனைவியும் அம்மாவும் அதிர்ச்சி அடைந்து விட்டனர், 1 கோடி ரூபாய் என்பது பெரிய விசயமாக அவர்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் நான் பொறுமையாக இப்பணம் ரசிகர்கள் மூலம்தான் கிடைத்தது என்பதையும்,இதன் மூலம் மற்றவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துச சொன்னேன்! கடைசியாக எனது விருப்பத்திற்கு எனது அம்மா ஒத்துக் கொண்டார்” எனக்கூறிச்சிரித்தார் ராகவா லாரன்ஸ்.