திரை உலகில் வில்லன்களை பந்தாடியது போல அரசியலிலும் இவர் ஆடிய ஆட்டம் அந்த அம்மாவையே அசைத்துப் பார்த்தது.
“குடித்து விட்டு சபைக்கு வருகிறார்கள்”என்று அந்த அம்மா ஆணி அடித்தால் “ஆமா இவர் வந்துதான் ஊத்திக் கொடுத்தார்”என்று திருப்பி ரிவிட் அடித்தார்.
ஆட்ட முடியுமா அசைக்க முடியுமா என்று பாடிய அதிமுகவினருக்கு கேப்டன் விஜயகாந்த் அடித்த ஆப்பு சரியான அத்தி மர ஆப்பு.
சுவரில் கால் வைத்து எதிரிகளை படங்களில் எகிறி அடித்தவர் உடல் நலக்குறைவினால் தளர்ச்சி அடைய தே.மு.தி.க.வுக்கும் நரம்புத் தளர்ச்சி.
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போலவே இவருக்கும் உடல் நலக்குறைவு.
தற்போது சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு நண்பரின் இல்லத்தில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்து கொண்டதாக இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன.