தமிழர் திருநாள் பொங்கல்,அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு.
கஜா புயலில் வீடு இழந்து நிலம் அழிந்து விவசாயம் பொய்த்துப் போன விவசாயிகளுக்கும் அன்றுதான் திருநாள்.
டேமேஜ் ஆன அரசியல்வாதிகளும் அன்று கொண்டாடுவார்கள். அசல் தமிழர்களும் நகல் தமிழர்களும் “பொங்கலோ பொங்கல் “என மேடைகளில் முழங்குவார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
புத்தாடைகள் அணிந்து கொண்டு பொங்கலுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு பார்க்க மக்கள் கிளம்பி விடுவார்கள். பொதுவாக கிராமங்களில் இப்படித்தான் நடக்கும். இப்போதுதான் ஜல்லிக்கட்டு கொண்டாடுவதற்கு அரசே தேதிகளை நிர்ணயிக்கிறது.
இத்தகைய ‘கோலாகலங்களுக்கு’ மத்தியில் சீயானின் ‘கடாரம் கொண்டான்’ டீசர் வெளியாகிறது.ஜன.1 5 -ல் ! உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு.இணைத் தயாரிப்பு ட்ரிடன்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் . விக்ரமுடன் அக்சராஹாசனும் நடித்திருக்கிறார்.ராஜேஷ் எம் செல்வா இயக்கம். வரலாற்றுப் பெயருடன் சோசியல் கருத்துகள். கடாரத்துக்கே போய் படம் எடுத்திருப்பது சிறப்பு.