ஒரு நேரத்தில் உய்யலாலாவாக இருந்த மீ டூ தற்போது லாரியில் அடிபட்ட தவளை மாதிரி கிடக்கிறது. யாரும் அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரிய வில்லை.
சின்மயி மட்டும் அடிக்கடி கூவிக்கொண்டிருக்கிறார். கோழி கூவினால் அன்றைக்கு அதுதான் பிரியாணி என்கிற கணக்கில் ராதாரவி அணியினர் அடுப்பு பற்ற வைக்கிறார்கள்.
தற்போது இந்த அணியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய சொந்தக்காரரான மூத்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
“இதெல்லாம் நீ பப்ளிக்ல கொண்டாந்தா உனக்கென்ன இருக்கு மரியாதை. நாளைக்கு எவனாவது மதிப்பானா? கீழ்த்தரமான விளம்பரம்” என்கிறார்.