நடிகைகளில் பலர் மதுவின் ருசி அறிந்தவர்கள்தான்!
இடை விடாத படப்பிடிப்புகள். அலுப்பு,,களைப்பு. கவலை ஆகிய சுமைகள் அவர்களை மஞ்சள் திரவத்தை நாடச்செய்கிறது.
தவறான பாதையில் போகிறோம் என்பது புரிந்தாலும் போதை அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது.
சிறந்த வலி நிவாரணி என தவறாக மனம் பதிவு செய்து கொள்கிறது.
ஆட்கொல்லி என்பது கணையம் காலி ஆகும் போது தான்அவர்களுக்கு புரிகிறது.
இதோ, இந்தியாவில் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலாவின் ஒப்புதல் வாக்குமூலம். புற்று நோயில் இருந்து மீண்டது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
“பணம் ,புகழ்,பெயர் எல்லாமே கிடைத்தது.! என்னை சுற்றி எப்போதும் நட்பு வட்டம்.
இதனால எந்த நேரத்திலும் பார்ட்டி,!
எனது காலடியில் இந்த உலகமே இருப்பதாக நினைப்பு,!
1 9 9 9-ல் லாவாரிஸ் படம் வெளியான நேரம். இடைவிடாத படப்பிடிப்புகள்.
உடலும் உள்ளமும் பலவீனமானது.
படுக்கையை விட்டுஎழவே மனமில்லாமல் போனது.எழுந்தாலும் மேக் அப் போடுவதற்கு மனம் இல்லை.ஷூட்டிங் செல்ல விருப்பம் இல்லை. வாழ்க்கை வெறுத்தது,!எந்திர வாழ்க்கையாகிப் போனது.
நாளுக்கு நாள் ஸ்டிரெஸ் அதிகமாகியது .வெளிநாட்டுப் படப்பிடிப்புகளாலும் மகிழ்ச்சி இல்லை.
அழுத்தம் ,மன அழுத்தம்! அமுக்கியது!
மீள்வதற்கு என்ன வழி? மதுவைத் தவிர!
உணவுக்குப் பின்னரும் வோட்கா .பழகிப்போனது.
எனது முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை.
தவறான முடிவுகளை எடுத்தேன்!”
இவ்வாறு ‘பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஹீல்டு என்கிற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.