பெரிய ஆறுதல் “ஏழு பேரா ,எனக்குத் தெரியாதுய்யா”என்று ஆப்சன்ட் மைன்ட் தலைவராகி விடவில்லை சத்யராஜ்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2 8 ஆண்டுகளாக சிறையில் வாடுகிற அந்த ஏழு பேரை பற்றிதான் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பதில் சொன்னார்.
“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தியெட்டு ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஏழுபேரும் விடுதலை செய்யப்படவேண்டும்.அவர்கள் அந்த குற்றத்தை செய்தார்களா இல்லையா என்பது கேள்வி அல்ல.எப்படிப்பார்த்தாலும் அதிகமான காலத்தை சிறையில் அவர்கள் கழித்திருக்கிறார்கள்.எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!”என்றார்