வருஷக்கடைசியில் ஏன்யா வாங்கிக் கட்டிகிறீங்க என்கிற லெவலுக்கு இறங்கி சிலரை எட்டி உதைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
கடந்த 2 8 ம் தேதியே விஷாலுக்கு பெண் பார்க்கிற செய்தியை ‘சினிமா முரசம்’ வெளியிட்டிருந்தது. இன்று பிரபல நாளிதழ் அதை உறுதி செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில் வரலட்சுமிக்கு கல்யாணம் என்பதாக செய்திகள் வெளியாக காண்டாகி இருக்கிறார் வரு.
“வருஷக்கடைசி. வழக்கம்போல செய்திக்காக அலைகிற சில யூஸ்லெஸ் ஆளுங்க எனக்கு கல்யாணம்னு வதந்தியை கிளப்பி விட்டிருக்காங்க. எனக்கு கல்யாணம் நடக்கல.இங்கதான் இருக்கேன் .தப்பா செய்தி போடுற ஆளுங்க ‘டிக்கி’யில் மிதி விழும்”னு பதிவு செய்திருக்கிறார்.