கருத்து கஸ்தூரியை பாராட்டியே ஆகவேண்டும்.
ரஜினியா,அஜித்தா யாருக்கு பலம் அதிகம் என்கிற பலப்பரீட்சை நடந்து கொண்டிருக்கிற நிலையில் பிராமணர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்கிற விளம்பரத்தை தமிழர்கள் மறந்தே போனார்கள்.
ஆனால் கஸ்தூரி மட்டும் அந்த விளம்பரத்தைக் கொடுத்தவர்களின் படத்தை தேடிப்பிடித்து குலம் கோத்திரத்தை கண்டு பிடித்து கண்டனம் தெரிவித்திருப்பது அரசியல் கடந்து பாராட்டுதலுக்குரிய செயலாகும். அவரது பதிவை படியுங்கள்.!
“பொதுவாக என் சமூகவலையில் ஜாதி பேசக்கூடாது என்று நினைப்பவள் நான், ஆனால் சில விஷயங்களை கண்டிப்பாக கடந்துபோக கூடாது.
இன்று இந்த விளம்பரத்தை பார்த்து வாயடைத்து போனேன்.
இந்த அய்யருங்க இருக்காங்களே, என்ன திமிர் இருக்கவேண்டும்! என்று ஆத்திரமும் அருவருப்பும் வந்தது.
இந்த நிறுவனத்தை நடத்தும் அந்த சாதி வெறி பிடித்த ப்ராஹ்மணர்கள் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அதிர்ச்சி !
நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜஸ்தானிய ஜாங்கிட் ( விஸ்வகர்மா, அதாவது தச்சர் ) குலத்தினர். தமிழும் இல்லை, அய்யரும் இல்லை ! அட ராமா !
நான் இப்போ என்ன செய்வது? அய்யருங்களை சந்தேகப்பட்ட என் அவசரபுத்தியை நினைத்து வெட்கப்படுவதா? இல்லை என்னை போல் அவசரக்காரர்கள் ஏராளமானோர் இங்குண்டு என்பதை நினைத்து அழுவதா சிரிப்பதா?
இதோடு என் ஆராய்ச்சி முடியவில்லை. வேலைவாய்ப்பில் ஜாதி பாகுபாடு பார்ப்பது சட்டப்படி குற்றமாயிற்றே, இதற்கு விளம்பரம் கொடுத்த அறிவாளிகளுக்கும், பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்ட நாளிதழுக்கும் என்ன தண்டனை என்று தேடினேன்-
அரசு வேலையில் ஜாதி பார்த்தல் குற்றம் என்பது சட்டம், தனியார் நிறுவனத்துக்கு அப்படி எந்த விதியும் இல்லை !

