கலர் பார்டர் இல்லாமல் வேட்டி கட்டுனா அரசியல்வாதியே இல்லேன்னு தமிழ்நாடு சொல்லிடும்..
அது மாதிரிதான் காதல் வதந்தி இல்லாமல் சினிமா ஸ்டார்ஸ் வருஷங்களை கடக்க முடியாது. அப்படி வளர்ந்தவர்கள்தான் பாகுபலி பிரபாஷ் -அனுஷ்கா ஜோடி. கல்யாண வயதுகளை தாண்டியவர்கள்தான் இருவரும்.!
கிசுகிசுகளை பறவைக் காய்ச்சல் மாதிரி பரவ செய்த இந்த ஜோடி அண்மையில் ஜெய்ப்பூரில் ஒன்றாக திரிந்தது.
ராஜமவுலியின் மகன் கல்யாணத்தில் கலந்து கொண்ட இருவரும் அருகருகே நின்று கொண்டு அம்சமான ஜோடியாக கேமராக்களுக்கு விருந்து வைத்தார்கள்.
ஊரே பார்த்தது.
“எப்பய்யா இவர்கள் கல்யாண சமையல் சாதம் போடுவார்கள்”?என்று கேட்கிறது “