ஆங்கிலேயப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பத்து நிமிடம் தாமதமாக அதாவது நள்ளிரவு 1 2 .1 0 மணிக்கு இயக்குநர் கே.வி.ஆனந்த் ‘ காப்பான்’என்பதை அறிவித்தார்.
மீட்பான் ,காப்பான்,உயிர் கா ஆகிய மூன்று பெயர்களை அறிவித்து இவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
கதைப்படி பிரதமராக நடிக்கும் மோகன்லாலின் மெய்க்காப்பாளர் பிரிவில் உயர் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அதனால் ‘காப்பான்’ என்பதை ரசிகர்கள் தேர்வு செய்திருந்தனர். அதையே இயக்குநரும் தேர்வு செய்து ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவித்திருக்கிறார்.