இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் கண்டிப்பாக அவர்களது ரசிகர்களின் மோதல் சோசியல் மீடியாக்களில் ரணகளமாகிவிடும். ஒருவரை ஒருவர் வாருவதில் இவர்களிடம் அரசியல்தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
“எங்க ஆள் பெரியவரா உங்க ஆள் பெரியவரா “என்கிற சண்டை வார்த்தைகளில் வெடிக்கும். இப்படித்தான் ஆகி விட்டது பேட்ட ,விஸ்வாசம் ஆகிய படங்களின் கதையும்!
பேட்ட படம் 5 நாட்களில் 1 கோடியே 6 0 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. ஆனால் விஸ்வாசம் இரண்டே நாட்களில் 1 கோடியே 5 0 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இன்னும் சில நாட்களில் பேட்டய பின்னுக்குத் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ட டிரைலரை 6 லட்சம் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் விஸ்வாசம் டிரைலரை 1 2 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆக சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.