திரைப்பட வர்த்தகத்தில் அரசாலும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இயக்குனர் முருகதாசும் இணைந்து தங்களது நான்காவது தயாரிப்பான ‘ பத்து எண்றதுக்குள்ள ‘ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பரவலாக எல்லோராலும் பேசப்பட்டு வந்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு இந்தப்படம் வெளி ஆவது ரசிகர்கள் இடையே பெரிதும் உற்சாகத்தை தூண்டி உள்ளது. ‘ பத்து எண்றதுக்குள்ள ” படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.
‘ஐ’படத்திற்க்கு பிறகு வெளி வரும் படம் என்பதால் சியான் விக்ரமின் ரசிகர்கள் இடையே இந்த படத்துக்கு அமோக வரவேற்பு இருக்கும். ‘கத்தி’ படத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் சமந்தாவுக்கும் இந்த படம் பெரிய படமாக அமையும்.
அக்டோபர் 21 ஆம் தேதி வெளிவர உள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என நம்பிக்கை தெரிவித்தனர் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர்.