“அண்ணே , நான் நடிக்கத்தான் வந்தேன்.டைரக்டராகிட்டேன் !”–இது இயக்குநர் இமயம்.
“ஏன் உங்க ஊர்ல கண்ணாடியெல்லாம் கிடையாதா?”–இது நடிகர் திலகம்.
அதாவது நடிகனாவதற்கு உரிய முகவெட்டு பாரதிராஜாவுக்கு இல்லை என்பதை கேலியாக சுட்டிக்காட்டியவர் சிவாஜி கணேசன். இது அந்தக்காலம்.
இப்ப காலம் மாறிப்போச்சு! பாரதிராஜா பக்கா நடிகனாகிட்டார்! ராக்கி படத்தில் அவர்தான் வில்லன். ‘தரமணி’ படத்து ஹீரோவுடன் நடிக்கிறார். இந்த கதையில் மிஷ்கினை நடிக்க வைக்கலாம் என நினைத்திருந்தார்கள் .வில்லங்கம் சூழ வலம் வருபவரை கூப்பிட்டால் சிக்கலில் சிக்கி விடுவோம் என் நினைத்து இமயத்தை ஒப்பந்தம் செய்து விட்டார்கள் போலும். அருண் மாதேஸ்வரன் என்பவர்தான் இயக்கம்.அறிமுகம். வாங்க சார்.பின்னுங்க.