சந்தர்ப்பம் கிடைத்தால் கட்சித் தலைவர்களையே ஒரு இழுப்பு இழுத்து விடுவார்கள். கிங் மேக்கராக இருந்த கலைஞர் கருணாநிதியையே அர்த்த ராத்திரியில் கையை முறுக்கி கதற விட்ட போலீஸ்காரர்கள் சாதாரண மியூசிக் டைரக்டரை சும்மா விட்டிருப்பார்களா?
அடங்க மறு படக்குழுவினர் மதுரைக்கு தியேட்டர் விசிட் போனார்கள் . இசை அமைப்பாளர் சாம் .சி.எஸ். கூடவே சென்றிருக்கிறார். அங்கு அடி வாங்கிய கதையை அவரே அடங்க மறு சக்சஸ் மீட்டில் சொன்னதுதான் அந்த விழாவின் ஹைலைட்.
கூட்டமான கூட்டத்தில் அவர் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கிறார். மேடை ஏறும் இடத்தில் ரசிகர்கள் கூட்டம் ஜெயம்ரவியை அருகில் சென்று பார்க்க முண்டி அடித்துக்கொண்டு நெருக்கடி கொடுக்கவே போலீசார் லேசாக தடியால் ‘தடவிக் கொடுத்து’ கலைத்திருக்கிறார்கள்.
அப்படி தடவி கொடுக்கப்பட்டவர்களில் இசை அமைப்பாளரும் ஒருவர். அவர் அடிபடுவதைப் பார்த்தவர் இயக்குநர் கார்த்திக் .ஆனால் அந்த அடியை விடுதலைப்போராட்டத் தியாகி மாதிரி பெருமையுடன்அவரே சொன்னதுதான் சூப்பர். ஒரு வயலினை உடைக்கப் பார்த்திருக்கிறார்களே