பேட்டயுடன் விஸ்வாசம் வருவதை சன் குழுமம் விரும்பல என்றே தெரிகிறது. விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைத்து விட்டாலும் இன்னும் ரிசர்வேஷனை தொடங்கவில்லை.
தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்தால் இன்னமும் உறுதியான தேதி தெரியல.ஆனா பொங்கல் அன்னிக்கி கன்பார்ம் என்கிறார்கள்.அதாவது பதினாலாம் தேதிக்கு ரிலீஸ் ஆகுமாம்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பத்தாம் தேதியில் ரிலீஸ் ஆவதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். பேட்டயுடன் விஸ்வாசம் வந்தால் தங்களுக்கு வசூல் பாதிக்கப்படும் என்று பேட்ட தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது என தெரிகிறது. நாலு நாளில் அள்ளி விடலாம் அல்லவா!
இன்று மாலைக்குள் உறுதியான தேதி அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறார்கள்.
தல அஜித் தரப்பினரை விசாரித்தால் பத்தாம் தேதி கண்டிப்பாக வந்து விடும்.அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.யாரை நம்புவது என்பது தெரியவில்லை