பெரிய திரையில் பிரமாண்டம் காட்டுகிற கலைப்புலி தாணு விரைவில் சின்னத் திரையிலும் சரித்திரம் படைக்கப்போகிறார்.இனி தினம்தோறும் இன்ப நாளிது,இனிய நாளிது தான்.
கிட்டத்தட்ட 3 ஆயிரம் எபிசோடு வரை போகக்கூடிய கதை தேர்வாகி இருக்கறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிற அந்த நெடுந்தொடரில் நடிக்கப்போவது யார், இயக்குநர் யார் என்பதெல்லாம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ராதிகா,குஷ்பூ ,விகடன் பாலசுப்பிரமணியம் போன்றோருக்கு கடுமையான போட்டியாக இருக்கலாம் என நம்பலாம்.