நெற்றியில் பட்டை நாமம் ,அதாவது பொட்டுக்கு மேலே. ஸ்ரீதேவியின் மகள் இருவரும் பக்தி மயமாக தந்தையுடன் திருப்பதி வேங்கடாசலபதியை தரிசனம் செய்தார்கள் .ஜனவரி முதல் நாளன்று!
கூடவே போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த அர்ஜுன் அனுஷா ஆகியோரும் வந்திருந்தனர். ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களுக்கும் அவர்கள்தான் பாதுகாப்பு.
ஜான்வி இன்னமும் அம்மாவை மறக்கவில்லை என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
” அம்மா இறந்த அதிர்ச்சியில் எனக்கு நான்கு மாதம் சுத்தமாக எதுவுமே நினைவில் இல்லை. அர்ஜுன்,அனுஷா இவர்கள் வந்த பின்னர்தான் சகஜநிலைக்கு திரும்ப முடிந்தது.”என்றார்.
அப்பாவின் முதல் மனைவியின் பிள்ளைகளின் ஆதரவு தங்களுக்கு இல்லாமல் போய் விடுமோ ,வெறுத்து விடுவார்களோ என்கிற பயம் கூட அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இன்றைய நிலையில் ஸ்ரீ தேவியின் மகள் இருவருக்கும்தான் சினிமாவில் மார்க்கெட் இருக்கிறது. இவர்கள் பொன் முட்டையிடும் வாத்துகள்.