பிரான்மலை படத்தின் பெயர். இயக்கி இருப்பவர் அகரம் காமுரா.
தேவர் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் .இவர் கிறிஸ்தவ மதம் சார்ந்த பெண்ணை கல்யாணம் செய்ததால் வாலிபரின் தாய் மாமன் வகையறா அந்த பொண்ணுக்கு விஷம் கொடுத்து கொல்ல வெறியாகிறார் வாலிபர்.மாமனையும் அத்தையையும் போட்டுத் தள்ளிவிட்டு மனநோயாளியாகிறார் .இதானப்பே கதை.ஆணவக்கொல.
“இந்தப்படத்தை பார்க்கணும்னு பா.ரஞ்சித்துக்கு போன் பண்ணினோம்.அட்டென்ட் பண்ணல.நேர்ல போனோம். ‘நான் என்ன செய்யனும்’னு கேட்டார். இந்த பதிலே சரியில்ல. பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு சமுதாயம் சார்ந்த கதைக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவாரா,வேறு ஒரு ஆதிக்க சாதி சார்ந்த ஆணவக்கொலை படத்துக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரா?”
இப்படி இணைத் தயாரிப்பாளர் சுஜாதா வருத்தப்பட்டு குற்றம் சாட்டினார்.