பிரபு தேவா தயாரிப்பில் புது முகம் வருண் நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ‘வினோதன் ‘எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது..இப்படம் குறித்து அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கூறும் போது, ‘பொதுவாக தமிழ்படங்களில் மன ரீதியான கதா பாத்திரங்களை பற்றி விவரிக்கும் போது ,அந்த கதா பாத்திரங்கள் சரியாக சித்தரிக்க படவில்லையோ என்ற மனத்தாங்கல் என்னிடத்தில் உண்டு. அந்தக் குறையை ‘வினோதன்’ நிவர்த்தி செய்யும். ‘வினோதன்’ படத்தில் நாயகனின் குணாதிசயம் தமிழ் படங்களில் இதுவரை பார்த்திராதது.இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறவர் மறைந்த நகைசுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் ஆவார். முறையாக எல்லா பயிற்சியையும் பெற்றவர். எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளி வர தயாராக உள்ள ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் அறிமுகமாகும் வருணுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கவே அவரை நான் முதலில் சந்தித்தேன்.அந்த நேரத்தில் தான் நான் வினோதன் கதையை எழுதி கொண்டு இருந்தேன். இவரை சந்தித்ததில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை பற்றி யோசிக்கும் போது அவரது முகம் தான் எனக்கு வர ஆரம்பித்தது.இருந்த போதிலும் மற்றவர்களும் என் கருத்தை ஆமோதிகட்டும் , முக்கியமாக தயாரிப்பாளர் பிரபு தேவா ஓகே சொன்னால் போதும் என்று இருந்தேன். நைட் ஷோ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பின்னர் என் கருத்தே அனைவரது கருத்தும் என்று அறிந்த போது எனக்கு பெரிய நிம்மதி. தயாரிப்பாளர் பிரபு தேவா சாரும் சூப்பர் என்று என்றவுடனே நான் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பணி புரிய ஆரம்பித்தேன்.இசை அமைப்பாளராக இமான் , பாடல் ஆசிரியராக மதன் கார்க்கி என்று எனக்கு பெரிய பலத்தை சேர்த்து இருக்கிறார் தயாரிப்பாளர் பிரபு தேவா.கதாநாயகி தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.’வினோதன்’ ஒரு வித்தியாசமான மன நிலை உள்ள மனிதனை பற்றியும் அவனது வினோதமான பழக்கங்களையும் பற்றிய உண்மை கதை ஆகும்.என்கிறார்.