இரண்டு பிரபலங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வருகிறது என்றால் அவரவர் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்கு தகுந்த மாதிரி காட்சிகளை தேர்வு செய்து டிரெய்லரை விடுவார்கள்.
அந்த மாதிரி கட் பண்ணி ஒட்டிய டிரெய்லர் ரஜினி,அஜித் ரசிகர்களிடையே முட்டல் மோதலை உருவாக்கி விட்டது.
2 8ம் தேதி பேட்ட முன்னோட்டம் வந்தது.
அதில் “எவனுக்காவது குடும்பம்,பொண்டாட்டி,புள்ள செண்டிமெண்டு இருந்தா ஓடிப்போயிடு.!கொல காண்டுல இருக்கேன் !கொல்லாம விட மாட்டேன் “என சூப்பர் ஸ்டார் ரஜினி பேசுவார்.
3 0 ம் தேதி வந்த விஸ்வாசம் முன்னோட்டத்தில் “பேரு தூக்குதுரை,ஊரு தேனி.பொண்டாட்டி பேரு நிரஞ்சனா,பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா” என தல அஜித் பேசுவார். இது ரஜினிக்கு சொன்ன பதில்தான் என்று தல ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளினார்கள்.
விஸ்வாசம் படத்தின் வில்லன் “என்கிட்டே இருக்கிற பணத்துக்கு எல்லா ஏரியாவையும் வாங்குவேன்”என அஜித்திடம் உதார் காட்ட “ஏறி மிதிச்சென்னா ஏரியாவ இல்ல மூச்சு கூட வாங்க முடியாது” என்று அஜித் பதிலடி கொடுப்பார்.
ரஜினி பேசிய “கொல காண்டுல இருக்கேன்”என்று பேசிய வசனத்துக்கு அஜித் “உங்கள பார்த்தா கொல வெறி வரணும் ஆனா எனக்கு உங்கள படிச்சிருக்கே “என பேசிய வசனத்தை ரஜினிக்கு சொல்வதாகவே எடுத்துக் கொண்டு இரு தரப்பு ரசிகர்களும் இணைய தளங்களில் மோதிக் கொண்டார்கள்.
ரஜினி தரப்பினரை அந்த வசனங்கள் புண் படுத்தியதாக தெரிகிறது .வருத்தப் பட்டிருக்கிறார்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள் “ரஜினி சார் எவ்வளவு பெரிய ஆள்.அவரையே கேலி பேசி மீம்ஸ் போடுகிறார்களே! என் படத்திலேயா இப்படி நடக்கவேண்டும் ” என்று கண்ணீர் விட்டதாக சொல்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்.சிவாஜி காலத்து ரசிகர்களுக்கு இந்த காலத்து ரசிகர்கள் எவ்வளவோ மேல் ! வார்த்தை சண்டை ,கேலி என்கிற அளவில் நிற்கிறது.