இது பயோபிக் சீசன்.
சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு பகுதியை படமாக்கி காசு பார்த்தார்கள். ருசித்தது.
குற்றவாளி என்று தண்டனை பெற்றாலும் ஒரு கட்சிக்கு உயிர் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவரது வாழ்க்கையை படமாக்கினால் வறண்டுபோன நாட்டிலும் வசூல் பார்த்து விட முடியும்.
இந்த நம்பிக்கையில் இரண்டு பேர் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் .
ஒருத்தரும் எம்.ஜி.ஆர்.வாழ்க்கையை படமாக்கத் துணியவில்லை என்பதுதான் சோகம்.?
விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் பிரதமர் மோடியின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.சந்தீப் சிங் தயாரிக்கும் இந்த படத்தில் மோடியாக நடிப்பவர் விவேக் ஓபராய். படத்தின் பெயர் பி.எம்.நரேந்திர மோடி.